Tuesday, April 29, 2008

விழுப்புரம் பாவேந்தர் பேரவை சார்பில் "பாவேந்தர் நினைவேந்தல்" ஊர்திப் பயணம் 21.4.2008 இல் நடந்தது. விழுப்புரம் தொடர் வண்டி நிலையத்தில் தொடங்கியது. வளவனூர், மதகடிப்பட்டு, திருபுவனை, வில்லியனூர்,மூலைக்குளம்,அய்யன்குடிப்பாளையம், சண்முகாபுரம் ஆகிய இடங்களில் வரவேற்பு கொடுக்கப்பட்டது. முத்தியால்பேட்டை பாப்பம்மாள் கோவில் இடுகாட்டில் பாவேந்தர் நினைவிடத்தில் முடிவடைந்த ஊர்திப்பயணத்தின் இறுதியில் தனித்தமிழ்க் கழகத்தின் தலைவர் திரு தமிழ்நாவன் உரையாற்றினார், மணிமேகலைகுப்புசாமி நினைவேந்தல் உரை நிகழ்த்தினார். புதுச்சேரிப் பகுதியில் ஏற்பாடுகளை தனித்தமிழ்க் கழகச் செயலர் சீனு . அரிமாப்பாண்டியன் செய்திருந்தார்.அய்யன்குடிப்பாளையத்தில் ஐயா. குணத்தொகையன் குடும்பத்தினர் சிறந்த பகலுணவை அளித்தனர்

Tuesday, March 11, 2008

நான்காம் நூல்

பல்வேறு சூழல்களில் எழுதிய மரபு பாக்களின் தொகுப்பான "அன்னவயல்" நூல் வெளியிடப்பட்டது.

Monday, February 25, 2008

கவியரங்கம்

புதுச்சேரி எழுத்தாளர் கழகம் நடத்திய "திங்கள் பாவரங்க"த்தில் பங்கேற்றுப் பதினாறு சீர் "கொலுவிருத்தம்" படித்தேன்.

Saturday, February 23, 2008

பேரணி

செம்மொழித் தமிழ் உயராய்வு மையமும், புதுச்சேரி முற்போக்கு எழுத்தாளர் சங்கமும் 19.02.08 இல் நடத்திய சங்கத் தமிழ்த் திருவிழா பேரணியில் கலந்து கொண்டேன்.

Wednesday, January 16, 2008

தெளிதமிழ் இதழின் பாவலர் பரிசு திட்டம்

தெளிதமிழ் இதழ் நடத்தும் "பாவலர் பரிசு திட்டம்- 37" இல் நான் பங்கு பெற்றேன். பரிசு கிடைத்தது. அப்பாடல் இதோ
நான்கடிக் கலித்துறை
சரியான வாழ்வு தமிழனுக்கு வேண்டின்
நரியான நெஞ்சர் நமையாளல் நீக்கு
நரியான நெஞ்சே நமக்கழா மென்றால்
கரியான நம்மினமும் காணாமற் போகும்
காவாத செந்தமிழும் காணாமற் போகும்.